கார்த்திகைப் பூ விவகாரம் – பிரித்தானியாவுக்கு அதிருப்தியை வெளியிடவுள்ள அரசாங்கம்!

கார்த்திகைப் பூ விவகாரம் – பிரித்தானியாவுக்கு அதிருப்தியை வெளியிடவுள்ள அரசாங்கம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் பிரித்தானியாவிடம் அதிருப்தி வெளியிடவுள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கார்த்திகை பூ, பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிடப்பட்டது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனை நாளை அமைச்சில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள