கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

You are currently viewing கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு (12.3.2024) யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிறீலங்கா பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், ரிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments