கொழும்பில் இன்று சந்திக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள்!

You are currently viewing கொழும்பில் இன்று சந்திக்கும் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள்!

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் கொழும்பில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது, அத்தோடு ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்ட இக்கட்சிகள் தமிழர்களுக்காக நேர்மையாக பேசுவார்களா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments