கொழும்பில் பதற்றம் ! முக்கிய இடங்களை சுற்றி வளைத்த பெண்கள்!

You are currently viewing கொழும்பில் பதற்றம் ! முக்கிய இடங்களை சுற்றி வளைத்த பெண்கள்!

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட நிலையில் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதிக்கு அருகில் பத்தரமுல்ல வழியில் தற்போது குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.7

உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டக்காரரர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் நுழையா வண்ணம் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments