கோட்டு சூட்டுப்போட்ட இந்திய மாப்பிள்ளைகள்!

You are currently viewing கோட்டு சூட்டுப்போட்ட இந்திய மாப்பிள்ளைகள்!

நினைவுநாட்களும்அதனை நீர்த்துப்போகச் செய்யும் வல்லாதிக்கமும் தமிழீழத் தமிழரின் உரிமைக்கான நீண்ட கால போராட்ட வரலாற்றில் இந்தியாவின் கறை படிந்த பக்கங்கள் நினைவு கூரப்படுவதை தடுப்பதற்கு அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு தந்திரமாக திரை மறைவில் காய் நகர்த்துவது இதுதான் முதல்முறையல்ல.

இந்தியாவின் குறித்த காய் நகர்த்தல் வெளிப்பட்ட இன்னொரு சந்தர்ப்பம் கடந்த 10.10.2022 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பண்பாட்டு பெருவிழா.

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளி மாலதி நினைவாக அவர் வீரச்சாவடைந்த தினத்தை தமிழ் ஈழ பெண்கள் எழுச்சிநாளாக பிரகடனப்படுத்தி அதனை வருடம் தோறும் நினைவு கூருவது வழமை.

மாலதியை நினைவேந்தல் செய்வது ஏன் இந்தியாவிற்கு கசப்பாக இருக்கின்றது என்பதை அறிவதற்கு மாலதி வீரச்சாவடைந்த தருணத்தை நினைவூட்டுதல் பொருத்தமானது.

இலங்கை இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் கரும்புலி மில்லர் கரும்புலித் தாக்குதலுக்கு பின்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்தது. அதனடிப்படையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக எமது தாயகப்பகுதிக்குள் நுழைந்தது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள், ஆயுதக்கையளிப்பு, அவர்களுடைய நம்பிக்கை துரோகத்தால் விரக்தியடைந்த திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய உண்ணாவிரதம், காந்திய தேசத்தால் கைவிடப்பட்ட திலீபனின் சாவு என நாட்கள் கடந்து இந்திய இராணுவத்துடனான சண்டை தொடங்கியது.

அவ்வாறு மூண்ட சண்டையில் கோப்பாயில் இந்திய இராணுவத்துடனான நேரடி சமரில் 10.10.1987 அன்று வித்தானவரே மன்னார் ஆட்காட்டி வெளியை சேர்ந்த மாலதி என அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை.

இதனை மறக்கடிப்பதற்காகவே இந்தியாவின் வழிநடத்தலில் அதே தினத்தில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா. இதற்கு யாழ் இந்திய துணைத்தூதரே சிறப்பு அதிதி

தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிய ஊடகங்கள் பலவும் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் என பலரும் தற்போது துணைத்தூதரக வழிகாட்டலிலேயே இயங்குகின்றனர் என்பதை வேதனையுடன் கூறவேண்டியுள்ளது.

மாலதி நினைவேந்தலை மறக்கடிப்பதற்காக அதே தினத்தில் கிளிநொச்சியில் பண்பாட்டு பெருவிழா என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பும் போது முன்னர் தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிய தற்போது யாழில் உள்ள துணைத்தூதரகத்தால் தத்தெடுக்கப் பட்டவர்கள் அக் கேள்விக்கு தந்திரமாக பதிலளித்து இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர்.

அவர்கள் கூறும் பதில் ” மாலதியை நினைவு கூரத்தான் வேண்டும் அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இப் பண்பாட்டு பெருவிழா வினால் எமது கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் அல்லவா ஆகவே குறித்த நிகழ்வை அனுமதிப்போம். என்ற சாரப்பட அமைகின்றது. துணைத் தூதரகம் சிறப்பாகவே பயிற்சியளித்துள்ளது.
இன்றும் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இந்தியாவின் கறை படிந்த முக்கியமான ஒருநாள். 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் கொக்குவில் பிரம்படி பகுதியில் வைத்து 50 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கவசவாகனங்களால் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . என்ன களியாட்டங்களை வேண்டுமென்றாலும் போடுங்கள் ஆனால்,சகாயசீலிகளை மறந்துவிடாதீர்கள்.
அற்ப சலுகைகளிற்காக. தேசத்திற்காக உதிரம் சிந்தியவர்களை மறந்து விடாதீர்கள். அது எம்மைச் சுட்டுப் பொசுக்கிடும். நினைவுகளை சுமந்தபடி இலக்கை நோக்கி நகர்வோம்.

இதேபோன்றுதான் இன்னுமொரு நாடகம் அரங்கேறியுள்ளது அது கோட்டு சூட்டுப்போட்ட இந்திய மாப்பிள்ளைகள் நாடகம்

எல்லா அமைப்புகளையும் ஒற்றுமையாக்கப் போறோம் ஓடியாங்கோ* ஒற்றுகாடு கிடக்கிற கேட்டுக்க கரடி காவடியெடுத்து ஆடிச்சுதாம் என்று முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. எல்லாம் காரணத்தோடதான் சொன்னவை பாருங்கோ.

தந்தை செல்வா காலத்தில இருந்து , தற்போது வரைக்கும் பல நற்சிந்தை கொண்டவர்களும், சில ஆர்வக்கோளாறுகளும் என பல நூறீறுக்கணக்கான முனைப்புகளை நாம் கண்டிருக்கிறோம்.

நல்ல நோக்கத்தில் செய்யப்பட்ட ஒற்றுமை முயற்சிகளை இந்திய, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள், கோட்பாட்டுப் பலவீனமான அமைப்புகளினுள் ஊடுருவி அவற்றை கைகூட விடாமல் அழித்து விட்டன. ஆர்வக்கோளாறுகளின் முயற்சிகள் , பலமான கோட்டுருவாக்கமும், கொள்கைத்திடமும் கொண்ட தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையின் பிரகாரம் ஒற்றுமை என்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடாத்திய விடுதலைப்புலிகளின் மூலோபாயத்தை ஒரு துளியளவேனும் புறந்தள்ளாமல், ஏற்றுக்கொண்டு அதன் வழியே கட்டமைக்கப்படவேண்டும். அதன்வழியே உருவாக்கப்படாத எந்த ஒற்றுமை நிறைவேற மாட்டாது. ஆனால் இந்த ஒற்றுமை என்ற ஒப்பிரேசனை நடாத்துபவர்கள் வருடத்தில் இரு தடவைகள் மிகவும் உச்சத்தில் ஓடித்திரிவார்கள் ஒன்று முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளை அண்மிதீத நாட்கள் , மற்றையது மாவீரர்நாளை ஆண்மித்த காலப்பகுதி, இந்தக் காலப்பகுதியில் ஒற்றுமை கடும் பேசுபொருளாக இருக்கும் .

பிறகு காத்துப் போன பலூன் போல சுருங்கி விடும். காணக்கிடையாது. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழவேண்டும் என்று தலைவர் சொல்லிருக்கிறார் என்று சொல்லுவினம் ஆனால் நான்தான் பெரிதென்று சொல்லுவினம் எல்லாம் எனக்கு தெரியும் என்று கத்துவினம். இவையெல்லாம் விக்கிரமாதித்தன் கதைபோல நீநீநீநீநீண்டு கொண்டே போகும்.

ஆனால் தேசியத்தலைவரின் சிந்தனையும் மாவீரர்களின் சக்தியும் எந்தக்கட்டத்திலும் எம்மை சோரம் போகவிடாது, பல சந்தர்ப்பங்களில் பல சூறாவளிகளிலிருந்து எம்மை காத்திருக்கிறது. இன்றும் நாங்கள் நாங்களாகவே இருப்பதற்கு இவை இரண்டும் என்றும் எமக்கு உறுதுணையாக நிற்கும்.

காலம் உருண்டோடும் ஆனால் எமது இலக்குகளை நோக்கிய பயணங்கள் தொடரும், திடமான வழிகாட்டலும் மூலோபாயமும் எம்மிடம் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது. போட்ட விதை அப்படி மிகவும் வீரியமானது. அது முளைத்து விருட்சமாகும் போது எதிரிகளிற்கும் துரோகிகளிற்கும் கூட அது நிழலும் பழமும் தரும். ஆக சலசலப்புகளைக் கண்டு அஞ்சவேண்டாம்.முன்னர் அடங்கியது போல அவை தானாகவே அடங்கும். எமது தேசியத்தலைவர் வழிகாட்டுகிறார் நாம் அந்தப்பாதையில் பயணிக்கிறோம் அவ்வளவுதான் . தமிழீழத்திற்கு ஒரு தலைவர். ஒரு கொள்கை. ஒரு மூலோபாயம், இதைத்தாண்டி எதுவும் இல்லை

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments