சார்லஸ் அவரது இளைய மகன் இளவரசர் ஹரியிடம் “உன் உண்மையான அப்பா யாரு?” என கேலி!

You are currently viewing சார்லஸ் அவரது இளைய மகன் இளவரசர் ஹரியிடம் “உன் உண்மையான அப்பா யாரு?” என கேலி!

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது இளைய மகன் இளவரசர் ஹரியிடம் “உன் உண்மையான அப்பா யாரு?” என கேலியா கேட்டுள்ளார். தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் தன்னிடம் “உன் உண்மையான அப்பா யார்? என கேலியாக கேட்டதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்பு புத்தகமான Spare இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. அந்த புத்தகத்தில் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹரி, தனது உண்மையான தந்தை இளவரசி டயானாவின் முன்னாள் காதலர் மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் என்ற பொது ஊகங்களுக்கு மத்தியில் வளர்ந்தார்.

ஹரியின் புத்தகத்தில், ஹெவிட் வதந்திகளைப் பற்றி சார்லஸ் ஒருபோதும் ஹரியிடம் நேரடியாகப் பேசவில்லை.

தனது அப்பா உண்மையில் சார்லஸ் அல்ல என்ற கருத்தை பத்திரிக்கை வாசகர்கள் விரும்புவதாக ஹரி அதில் கூறியுள்ளார்.

“ஒரு இளம் இளவரசனின் வாழ்க்கை சிரிக்கக்கூடியதாக இருந்தது என்பது வாசகர்களுக்கு நன்றாக உணரவைத்திருக்கலாம். நான் பிறந்து நீண்ட காலம் வரை மேஜர் ஹெவிட்டை என் அம்மா சந்திக்கவில்லை என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை” என்று எழுதியுள்ளார் ஹரி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments