உக்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவு!

You are currently viewing உக்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவு!

உக்ரைனில் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று உக்ரைனில் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் அன்று ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உத்தரவிட்டார். உக்ரைனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்யா முழு போர் நிறுத்தத்தை கொண்டு வருவது இதுவே முதல் முறை.

ரஷ்யாவின் 76 வயதான ஆர்த்தடாக்ஸ் தலைவர் பேட்ரியார்க் கிரில் மத விடுமுறையின் போது போர்நிறுத்தத்திற்கான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக புதின் அறிவித்துள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

ரஷிய படைகள் ஜனவரி 6-ஆம் திகதி நண்பகல் 12:00 மணி முதல் 36 மணி நேரம் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கிரெம்ளின் கூறியுள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி 6-7 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments