சிறந்த நாடுகளின் உலகளாவிய தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

You are currently viewing சிறந்த நாடுகளின் உலகளாவிய தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!

உலகின் சிறந்த நாடுகளின் உலகளாவிய தரவரிசையில் கனடாவை முதல் இடத்தை இழந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. செப்டம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட, US News சிறந்த நாடுகளின் வருடாந்திர அறிக்கையில், உலகின் சிறந்த இடங்களை வரிசைப்படுத்த, வாழ்க்கைத் தரம், சக்தி, கலாச்சார செல்வாக்கு மற்றும் பாரம்பரியம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டது. 2021-ஆம் ஆண்டில் கனடா முதலிடத்தைப் பிடித்தாலும், 2022-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்தது.

வாழ்க்கைத் தரம், சுற்றுலா, படித்த மக்கள் தொகை மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து இப்போது மொத்த போட்டியாளர்களில் 85 பேரில் “ஒட்டுமொத்தமாக சிறந்த நாடு” என்ற பட்டத்தை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, ஜேர்மனி இரண்டாவது இடத்தைப் பிடிக்க, கனடா துரதிர்ஷ்டவசமாக மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கியது.

வாழ்க்கைத் தரம் மற்றும் மாற்றத்திற்கு ஏற்ற நாடு (agility) போன்ற தனிப்பட்ட குணாதிசயங்களுக்காக கனடா ஒட்டுமொத்தமாக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தாலும் , மற்ற பகுதிகளில் அது குறைவாகவே இருந்தது.

எடுத்துக்காட்டாக, தங்கள் கலாச்சாரத்துடன் வரலாற்றை வடிவமைத்துள்ள இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற போட்டியாளர்களை விட பின்தங்கி, பாரம்பரியம் (heritage) என்று வரும்போது கனடா 28-வது இடத்திற்கு வந்தது.

இதேபோல், கனடா அதன் ‘கலாச்சார செல்வாக்கு’ என்று வரும்போது குறைவான மதிப்பெண்களைப் பெற்றது.

மேலும் “சாகசம்” (Adventure) என்ற வகையிலும் கண்டா பின்தங்கியுள்ளது. அதன் நட்பு மற்றும் இயற்கைக்காட்சியின் கீழ் நியாயமான முறையில் மதிப்பிடப்பட்டாலும், கனடாவின் காலநிலை 100-க்கு 23.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் அதன் ஒட்டுமொத்த கவர்ச்சிகரம் “sexiness” 100-க்கு 3.5 என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சிறந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா நான்காவது இடத்திலும், ஸ்வீடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

அதனைத் தொடர்ந்து ஜப்பான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகியவை ஒட்டுமொத்தமாக முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

ஒருவேளை அடுத்த வருடம் கனடா முதலிடத்தை பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments