சிறீலங்காவில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று!

சிறீலங்காவில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு, வாழைத்தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய நிலையில் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து வாழைத்தோட்டத்தில் அந்தப் பெண் உள்ளிட்ட 27பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணாலே அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments