சிறீலங்கா காவல் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு!

You are currently viewing சிறீலங்கா காவல் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக்கு முன்பாக உள்ள கடையொன்றின் உரிமையாளர் சிறீலங்கா காவல் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடையின் உரிமையாளரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரத்தினம் ஹரீந்திரன் என்பவருக்கும் இன்னொருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்காக யாழ். சிறீலங்கா காவல்துறை  நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.

இதன்பின்னர் சிறீலங்கா காவல்த்துறையினர் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments