டென்மார்க்கிலும் முதலாவது கொரோனா தொற்று!

டென்மார்க்கிலும் முதலாவது கொரோனா தொற்று!

டென்மார்க்கில் முதலாவது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை TV 2 மற்றும் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தனது குடும்பத்துடன் வடக்கு இத்தாலியில் பனிச்சறுக்கு விளையாட சென்றிருந்த Jakob Tage Ramlyng என்பவரே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நபர் திங்களன்று டென்மார்க் திரும்பியுள்ளார். தொடர்ந்து புதன் காலை முதல் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. பின்னர் புதன் இரவு அவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இப்போது அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அவரது மனைவி மற்றும் மகன் இருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்:- TV2.dk

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த