நோர்வே பண பெறுமதி அதல பாதாளத்தில்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வே பண பெறுமதி அதல  பாதாளத்தில்! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயினுடை நாணய பெறுமதி பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” பரவல் உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சிகளை தோற்றுவித்துள்ளதால், சரிவடைந்திருக்கும் உலகளாவிய ரீதியிலான பெற்றோலியப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் காரணமாக, நோர்வேயின் நாணயமான “குரோனர் / Kroner” பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.

ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் மெதுவான வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியிருந்த நோர்வேயின் நாணய பெறுமதி, தற்போதைய நிலையில் இன்னும் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதோடு, நோர்வேயின் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான “Opec” அமைப்பும், ரஷ்யாவும் தமது எண்ணெய் உற்பத்திகளை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், இந்நாடுகள் பெற்றோலிய உற்பத்தியை அதிகரிக்குமாளால், எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படுமெனவும், அந்நிலை தோன்றுமானால், எண்ணெய் உற்பத்தி நாடகவிருக்கும் நோர்வேயின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படுமெனவும் அஞ்சப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள