“எபோலா” எதிர்ப்பு மருந்தை கையிலெடுக்கும் சுவீடன்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing “எபோலா” எதிர்ப்பு மருந்தை கையிலெடுக்கும் சுவீடன்! “கொரோனா” அதிர்வுகள்!!

“எபோலா” வைரசை எதிர்க்கவென தயாரிக்கப்பட்டு, இன்னமும் பசிசோதனை நிலையிலேயே இருக்கும் “Remdesivir” என்ற எதிர்ப்பு மருந்து மாதிரியை, “கொரோனா” பாதிப்பால் அதிதீவிரமாக பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொடுக்கும் முயற்சியில் சுவீடன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” குடும்பத்தை சேர்ந்தவையென கருதப்படும் “sars” மற்றும் “mers” வைரசுக்களை எதிர்த்துப்போராடுவதில் மேற்படி “Remdesivir” எதிர்ப்பு மருந்து குறிப்பிடத்தக்க பலனை ஆய்வுகளில் வழங்கியிருந்ததால், குறிப்பிட்ட இம்மருந்து, “கொரோனா” வுக்கும் எதிராக பாவிக்கப்படலாமென்ற கருத்துக்கள் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, நோர்வேயும் இக்குறிப்பிட்ட எதிர்ப்பு மருந்தை “கொரோனா” நோயாளிகளில் பரீட்சித்துப்பார்ப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதாக முன்னதாக செய்திகள் வந்திருந்தன.

தொடர்புபட்ட செய்தி:

https://news.tamilmurasam.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/

பகிர்ந்துகொள்ள