பதவி விலக ரணில் இணக்கம்!

You are currently viewing பதவி விலக ரணில் இணக்கம்!

இலங்கையின் அதிபர், கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமறைவாகியுள்ளதையடுத்து, இலங்கையின் பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்க இன்று அவசரமாக கூட்டிய சர்வகட்சி சந்திப்பில் முன்மொழியப்பட்ட விதந்துரைகளின் அடிப்படையில், சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டரசாங்கம் அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில், பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு திரு. ரணில் விக்கிரமசிங்க சம்மதித்துள்ளதாக இறுதிக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பில் பின்வருவன தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டதாக, திரு. மனோ கணேசன் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

(1) ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்.

(2) அரசியல் சட்டப்படி, சபாநாயகர் இடைகால ஜனாதிபதியாக வேண்டும்.

(3) அரசியல் சட்டப்படி, பாராளுமன்றம் பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

(4) சர்வகட்சி அரசை உருவாக்க வேண்டும்.

(5) இவ்வருட இறுதிக்குள் புதிய மக்களாணை பெற பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments