பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் மர்ம மரணம்!

You are currently viewing பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் மர்ம மரணம்!

இந்தியாவில் தமிழ்நாட்டு மாநிலத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒயிட் பாஸ்தா சாப்பிட்ட பிரதியா என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்த பிரதியா (22) என்ற இளம்பெண்ணும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 13ம் திகதி இருவரும் திருமணம் செய்துக்கொண்டு அதேபகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிய நிலையில், திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுங்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் பிரதியா ஒயிட் பாஸ்தா வாங்கி சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து படுத்துள்ளார்.

ஆனால் சாப்பிட்ட உணவு செரிக்காமல் அவதியடைந்த பிரதிபாக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது கணவர் விஜயகுமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரதிபாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார், இருப்பினும் பிரதிபா சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பழனி கஞ்சனூர் காவல் நிலையத்தில் பிரதிபாவின் தந்தை, தனது மகள் விசம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனால் பிரதிபாவின் காதல் கணவன் விஜயகுமார் மற்றும் பாஸ்தா உணவகம் ஆகியவற்றில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இளம்பெண் இருதய அடைப்பு பிரச்சனைகளுக்காக தினசரி மாத்திரை எடுத்து வந்திருக்கிறார்.

எனவே உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே இளம் பெண்உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என தமிழ்நாடுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments