பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்!

You are currently viewing பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்!

பிரித்தானிய தெருக்களில் ஊடிருவியிருக்கும் ஈரானிய கூலிப்படைகள் தொடர்பில் 15க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அல்லது கடத்தல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானுக்கு எதிராக எவர் குரல் எழுப்பினாலும், அவர்களுக்கு எதிராக இந்த கூலிப்படை நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தலின் மையமாக லண்டன் மாறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான கூலிப்படையை ஈரானின் புரட்சிகர காவலர் படை வழிநடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 36 வயதான ஊடகவியலாளர் Pouria Zeraati மீது கடந்த மாதம் விம்பிள்டனில் அவரது குடியிருப்புக்கு வெளியே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அதில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஈரானின் கைக்கூலிகள் என்றே நம்பப்படுகிறது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து மூன்று குற்றவாளிகளும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்றே விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஈரானில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல் தொடர்பில் செய்தி வெளியிட்டவர் Pouria Zeraati. சம்பவத்தின் போது ஒருவர் Pouria Zeraati-ஐ அணுகி வெறும் 3 பவுண்டுகள் கோரியதாகவும், அதே வேளை இன்னொருவர் Pouria Zeraati-ன் காலில் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கார் ஒன்றில் அந்த மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். தற்போது 24 மணி நேர காவல்துறை காவலில் Pouria Zeraati வாழ்ந்து வருகிறார். ஈரானின் புரட்சிகர படையால் ஒட்டுமொத்த மேற்கத்திய நாகரீகமும் ஆபத்தில் உள்ளது என தெரிவிக்கிறார் Pouria Zeraati.

பிரித்தானியாவில் இருந்து ஈரான் தொடர்பில் செய்தி வெளியிடும் சரிபாதி ஊடகவியலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முறைகளில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் தொடர்பில் செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் தங்கள் உயிருக்கு பயந்து பிரித்தானியாவில் வாழ்வதாகவே கூறியுள்ளனர்.

2022 தொடக்கம் ஈரான் தொடர்பில் பிரித்தானியாவில் கடத்தல் அல்லது கொலை மிரட்டலை எதிர்கொண்ட தனிப்பட்ட நபர்களின் 15 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தரப்பில் நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments