மகாஜனாக்கல்லூரி மாணவிகள் இருவருக்கு தொற்று!

You are currently viewing மகாஜனாக்கல்லூரி மாணவிகள் இருவருக்கு தொற்று!

மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகளான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்கள் எண்பதற்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கீரிமலை கூவில் என்ற பகுதியைச் சேர்ந்த சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்தாருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வெளியாகிய பிசிஆர் முடிவுகளின் அடிப்படையில் குறித்த நபரின் மகள்களான மகாஜனாக் கல்லூரியில் தரம் 09, தரம் 07 இல் கல்வி பயிலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவிகள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச் சென்று வந்த நிலையில் தரம் 09 மாணவி பரீட்சை ஒன்றுக்காக சனிக்கிழமையும் கல்லூரி சென்று வந்திருக்கின்றார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் குறித்த மாணவிகளுடன் பயின்ற மற்றும் பழகிய மாணவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் 80 இற்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

பகிர்ந்துகொள்ள