மட்டக்களப்பில் நீரோடையில் தவறி விழுந்து இளைஞன் பரிதாபமாக மரணம்!

Default_featured_image

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வில்லுக்குளம் நீரோடையில் விழுந்து இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஆர்.கே.எம்.பாடசாலை வீதி கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ரீ.கவிசாந் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கல்முனை பிரதேசத்திலிருந்து தனது சொந்த வேலையின் பொருட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை நோக்கி சென்று பின்னர் தங்களது வேலைகளை முடித்து விட்டு அம்பிளாந்துறை வில்லுக்குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அந்த நீர் நிரம்பிய குழியில் விழுந்து காப்பாற்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அமனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சிறீலங்கா காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments