மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021

You are currently viewing மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021

தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்!

இரண்டாம் நாள்: 15.05.2021

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. 

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-

தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும்,  நாடு தழுவிய மனித நேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் கிளாறூஸ், சொலத்தூர்ண், பிறிபேர்க் மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 1

சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான இன அழிப்பினை வேற்றினமக்களுக்கு வெளிக்கொணரும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் தமிழின அழிப்பின் சாட்சியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்,  இளையோர்களால் துண்டுப்பிரசுர விநியோகமும் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக விடுதலை வேட்கையுடன் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும்  பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது  நாளை (16.05.2021) காலை சூரிச் மாநிலத்தில் இருந்து தொடர் கவனயீர்ப்புடன் சுக் மாநிலம் ஊடாகச் சென்று லுட்சேர்ன் மாநிலத்தைச் சென்றடையவுள்ளதனால் இன உணர்வாளர்கள் அனைவரும் மாநில ரீதியாக மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு வலுச்சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

 ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 2
மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 3
மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 4
மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 5
மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 6
மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் இரண்டாம் நாள்: 15.05.2021 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments