மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலை!

You are currently viewing மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலை!

தனது மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு சிறீலங்கா காவற்துறை பிரிவிலுள்ள கருப்பிடமலை நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து படுகொலை செய்த கணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியன் குளத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான ஜெயக்குமார் புவனேஸ்வரி (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுபோதையில் இருந்த கணவனே, மனைவியை இவ்வாறு தாக்கியுள்ளார்.

குறித்த வயல் பிரதேசத்தில் வேளாண்மை செய்துவரும் விவசாயி ஒருவரின் வயலுக்கு வேளான்மை காவலுக்க அமர்த்தப்பட்ட கரடியன் குளத்தை வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது 10 வயதான மூத்த பிள்ளையை அவரது அம்மம்மாவுடன் தங்கவைத்துவிட்டு அவரது மனைவி மற்றும் 5 , 3 வயது குழந்தையுடன் வயலில் காவலுக்காக அமைக்கப்பட்ட குடிசையில் தங்கி இருந்து வேளாண்மை காவல் காத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது மனைவி ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றி சண்டையாக மாறியதையடுத்து அங்கிருந்த மண்வெட்டிப் பிடியினால் மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

அவரது கணவனை சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்தனர். சம்பவ இடத்துக்கு தடையவியல் சிறீலங்கா காவற்துறை பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்து நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கரடியனாறு சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments