மாஞ்சோலையில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு!

You are currently viewing மாஞ்சோலையில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் வாகனம் நிக்காமல் சென்றுள்ளது.

இந்த நிலையில் நீராவிப்பிட்டி முதன்மை வீதியில் வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி குதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த மாணவனும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார்.

வாகனத்தில் இருந்து குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments