இலங்கையில் மீன் வியாபாரிக்கு கொரோனா மீன் சந்தை மூடப்படுகிறது!

இலங்கையில் மீன் வியாபாரிக்கு கொரோனா மீன் சந்தை மூடப்படுகிறது!

பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பேலியகொடை மீன் சந்தையை நாளை புதன்கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வியாபாரி ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுட்டதை தொடர்ந்தே மேற்படி சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் 154 மீன் கடைகள் உள்ளன. அதன் விற்பனையாளர்கள் நாளை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments