முல்லைத்தீவில் இரு மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்- வாகனத்துடன் தப்பி ஓடிய சாரதி.!

You are currently viewing முல்லைத்தீவில் இரு மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்- வாகனத்துடன் தப்பி ஓடிய சாரதி.!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவராம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் யாழ் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொள்குளாய் முகத்துவாரம் பகுதியினை சேர்ந்த இரண்டு சிறுமிகள் மிதிவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடந்த 13.01.203 அன்று பின்னால் பயணித்த கப் வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த 14,15 அகவையுடை இரண்டு சிறுமிகள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனமும் சாரதியும் தப்பி சென்றுள்ள நிலையில் வாகனத்தினை தேடும் நடவடிக்கையிலும் விபத்து தொடர்பான மேலதிக நடவடிக்கையில் கொக்குளாய் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments