மேதகு பிரபாகரன், ராஜராஜ சோழன் வரலாற்றையும் வெற்றிமாறன் இயக்குவார்

You are currently viewing மேதகு பிரபாகரன், ராஜராஜ சோழன் வரலாற்றையும் வெற்றிமாறன் இயக்குவார்

ராஜராஜ சோழன் மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரின் உண்மை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவார் என்றும் அதை தான் தயாரிக்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

கீச்சகத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,

“தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும்.

அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments