மோசமாக நடந்து கொண்ட சிறீலங்கா காவற்துறை எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

You are currently viewing மோசமாக நடந்து கொண்ட சிறீலங்கா காவற்துறை எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுகூர முயற்சித்தவர்களிடம் சிறீலங்கா காவற்துறை நேற்று மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் சிறீலங்கா காவற்துறைக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் சிறீலங்கா காவற்துறை கடுமையாக நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்றும் போராட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் சிறீலங்கா காவற்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments