யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

You are currently viewing யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம்- கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கும் போது அதிகாலையில்  உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்டபோது குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments