யாழில் தொடரும் சமூக சீர்கேடுகள் ! பெண்களிடம் அத்துமீறிய பாடசாலை மாணவர்கள்!

You are currently viewing யாழில் தொடரும் சமூக சீர்கேடுகள் ! பெண்களிடம் அத்துமீறிய பாடசாலை மாணவர்கள்!

யாழில் நாளுக்கு நாள் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ் கீரிமலை பகுதியை சேர்ந்த சில பெண்பிள்ளைகள், குடும்ப வறுமை காரணத்தினால் யாழ் மாநகரில் அமைந்துள்ள விற்பனையகம் ஒன்றில் வேலை செய்துவருகின்றனர்.

அவர்கள் தங்களுடைய போக்குவரத்திற்காக பேருந்துச் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.

யாழ் புறநகர் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த(17 வயது) , யாழ் பிரபல கலவன் பாடசாலை சேர்ந்த இவ்வாண்டு கா.பொ.த சாதாரண தரம் தோற்றிய மாணவர்கள் சிலர் குறித்த பெண் பிள்ளைகளிடம் தவறான நோக்கத்தோடு தொடச்சியாக தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் சீண்டல்கள் எல்லை மீறி பாலியல் நோக்கத்தோடு சென்றுள்ளதால் , குறித்த பிள்ளைகள் செருப்பை கழற்றி காண்பித்து எச்சரித்துள்ளனர்.

அதற்கும் அடங்காத அந்த பதின்ம வயதினர் அவர்களுக்கு தங்களுடைய ஆணுறுப்பை காட்டி தங்களோடு உல்லாசம் அனுபவிக்க வரச்சொல்லி அழைத்துள்ளனர்.

இச்சம்பவம் அந்த சிறுவர்களின் தந்தை ஒருவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தந்தை தன் மகனை “அடி உதையுடன் கவனித்து” அந்த பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்ட பிற மாணவர்களின் பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இச் சம்பவம் பொலீஸ் நிலையம் – நீதிமன்றம் என்று செல்லாதவாறு பேசி தீர்த்து வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடந்தேறிவருகின்றது.

குடும்ப கஷ்டத்தின் மத்தியில் வேலைக்கு செல்கின்ற பிள்ளைகள் இவ்வாறான சீண்டல்களையும் பாலியல் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டே செல்லவேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் எடுப்பதோடு அவர்களது செயற்பாடுகளை கவனிப்பதன் மூலமாக குறித்த சீர்கேடுகளை தடுக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments