யாழில் பல மாதங்களாக போதைக்கு அடிமையான இளைஞன் பிறந்தநாளன்று கிணற்றில் சடலமாக மீட்பு!

You are currently viewing யாழில் பல மாதங்களாக போதைக்கு அடிமையான இளைஞன் பிறந்தநாளன்று கிணற்றில் சடலமாக மீட்பு!

பொன்னாலை பிள்ளையார் கோவிலடியில் உள்ள குளத்துக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இளைஞர் ஒருவரது சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 5 மாதங்களாக பொன்னாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அவர் தனது 21வது பிறந்ததினமான நேற்று முன்நாள் காணாமல் போயுள்ளார். அதனையடுத்து உறவினர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார். அவரது காலணி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன கிணற்றுக்கு வெளியே இருந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரான 21 வயது கிருஷ்ணமோகன் கிருசாந்தன், பல மாதங்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

குறித்த இளைஞரது மரணம் குறித்து வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினர் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments