யாழில் போதைப்பொருள் பாவணையால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

You are currently viewing யாழில் போதைப்பொருள் பாவணையால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வது கண்டறியப்பட்டது.

அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன் கடும் காய்ச்ச்சலுடனும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள்.

இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் மருத்துவமனைக்கு சிகிசிச்சைக்கு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments