யாழ்.பண்ணைக் கடலில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

You are currently viewing யாழ்.பண்ணைக் கடலில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் பண்ணைக்கடலில் வீழ்ந்து உயிரிழந்தவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த நபருக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செல்பி எடுக்க முற்பட்டபோது தவறி வீழ்ந்து K.கௌதமன் (வயது 29 ) என்பவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று பகல் அவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அவரின் சடலத்துக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments