வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

You are currently viewing வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் பெருமளவு கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன. நேற்றுமுன்தினம் வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.

அதேவேளை யாழ். மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.

மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள்மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 

கடும் காற்று மற்றும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கரைச்சியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், கண்டாவளையில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேரும், பூநகரியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், பளையில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேருமாக, மொத்தம் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ததோடு கடுமையான காற்று மற்றும் கடும் குளிரான சூழல் நிலவியது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பல நூற்றுக்கணக்கில் உயிரிழந்துள்ளன.

குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக அறிய கிடைக்கின்றது. அதனை விடவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான தகவல்களை திரட்டும் பணி இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.

வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 1
வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 2
வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 3

சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக கிளிநொச்சியில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.

இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும். இன்று மதியம் வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம் இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 4
வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 5
வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 6
வடக்கில் குளிரினால் 500 கால்நடைகள் உயிரிழப்பு! 172 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments