வவுனியா, சிறைச்சாலை கைதி திடீரென உயிரிழப்பு!

You are currently viewing வவுனியா, சிறைச்சாலை கைதி திடீரென உயிரிழப்பு!

வவுனியா சிறீலங்கா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் இன்று மாலை மரணமடைந்துள்ளார்.

இவ் விடயம் பற்றி அறியவருவதாவது,

முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைவாசம் பெற்று வந்த மாவில்வத்தை கண்டியை சேர்ந்த 62 வயதுடைய இ. சேகர் என்ற நபர்  இன்று (4) பிற்பகல் அதிக சளி காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததன் பின்னர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments