ஹமாஸ் அக்டோபர் 6ம் திகதியை தெரிவு செய்த பின்னணி என்ன?

You are currently viewing ஹமாஸ் அக்டோபர் 6ம் திகதியை தெரிவு செய்த பின்னணி என்ன?

இஸ்ரேல் – பாலஸ்தீன நெருக்கடி நெடுங்காலமாக தொடர்ந்து வந்துள்ள நிலையில், திடீரென்று ஹமாஸ் படைகள் பலமுனைத் தாக்குதலை முன்னெடுக்க, தற்போது வரையில் இறப்பு எண்ணிக்கை பல ஆயிரங்கள் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 6ம் திகதி திடீரென்று ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலை முன்னெடுத்தது. தற்போது, ஹமாஸ் படைகள் அக்டோபர் 6ம் திகதியை தாக்குதலுக்கு தெரிவு செய்துள்ளதன் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கும் இந்த அக்டோபர் 6ம் திகதி வரலாற்று ரீதியாக மிக முக்கியம் என்றே கூறப்படுகிறது. அதனாலையே, ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அக்டோபர் 6ம் திகதியை தெரிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அக்டோபர் 6ம் திகதி 1973ல் மிகக் கொடூரமான Yom Kippur போரினை அரபு நாடுகளின் கூட்டணி முன்னெடுத்துள்ளது. Yom Kippus என்பது யூதர்களின் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் அக்டோபர் 6ம் திகதி அரபு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்தது. Yom Kippur போர் அல்லது அக்டோபர் யுத்தம் என்பது இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான நான்காவது மிகப்பெரிய போர் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ரமலான் மாதத்தின் 10ம் நாள் குறித்த போர் மூண்டது. எகிப்து மற்றும் சிரியப் படைகள் பாலஸ்தீனத்தை ஆதரிக்க, இஸ்ரேலியப் பகுதிகள் மீது அரபுக் கூட்டுப் படைகள் திடீர்த் தாக்குதலை நடத்தியது.

எகிப்து மற்றும் சிரியப் படைகள் போர் நிறுத்த எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்ததும், இஸ்ரேல் தனது எதிரிகளை முறியடிக்க நான்கு நாள் எதிர் தாக்குதலை முன்னெடுத்தது.

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், எகிப்து மற்றும் சிரியா படைகள் வெளியேறியது. அத்துடன் இந்த போரானது அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே பதட்டத்தை உருவாக்கியது.

அமெரிக்கா வழக்கம் போல் இஸ்ரேலை ஆதரிக்க, சோவியத் ஒன்றியம் அரபு நாடுகளை ஆதரித்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இறுதியில் அக்டோபர் 25 அன்று போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியது,

இது போரின் முடிவுக்கு வழிவகுத்தது. Yom Kippur போரில் 18,500 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் லட்சக்கணக்கானோர் காணாமல் போன நிலையில், அக்டோபர் 6ம் திகதி என்பது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலிய பிரதேசங்களுக்கும் இரத்தக்களரி வரலாற்றையே நினைவுக்கு கொண்டுவந்துள்ளது.

அரபு கூட்டுப் படையினரில் எகிப்து மற்றும் சிரியா படைகளில் தலா 5,000 பேர் கொல்லப்பட்டனர். தற்போதைய நிலை போன்றே 1973 அக்டோபரிலும் போர் குற்றங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments