இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது!

You are currently viewing இஸ்ரேலில் பலியான பிரித்தானியர்கள் எண்ணிக்கை வெளியானது!

அக்டோபர் 6ம் திகதி திடீரென்று ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதலை முன்னெடுத்த நிலையில், அதில் வெளிநாட்டவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியர்கள் தரப்பில், இதுவரை நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறார்கள் உட்பட 13 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், 26 வயதான பிரித்தானியர் Jake Marlowe என்பவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

மேலும், இஸ்ரேலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை நிமித்தம் Jake Marlowe இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் காஸா எல்லை அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட நோவா இசை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அக்டோபர் 6ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் திட்டத்தின் முதல் இலக்கு இந்த இசை விழா என்றே கூறப்படுகிறது.

இதுவரை 260 பேர்களின் சடலங்கள் இந்த இசை விழா நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஹமாஸ் படைகள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை பகலில் இருந்தே Jake Marlowe என்பவர் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மேலும், துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்படுவதற்கும் சில மணி நேரம் முன்னர் தான், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக Jake Marlowe தமது தாயாருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு, தொடர்ந்து தொடர்பு கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸா எல்லையில் இருந்து மட்டும் ராணுவத்தினர், ஆண்கள், பெண்கள், சிறார்கள் என சுமார் 150 பேர்களை ஹமாஸ் படைகள் இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, சிறார்கள் உட்பட 17 பிரித்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு புதிய இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பதிலடியாக பணயக்கைதிகளில் ஒருவரை கொல்ல இருப்பதாக ஹமாஸ் தரப்பு அறிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

காஸா பகுதியை மொத்தமாக அழிக்க சூளுரைத்துள்ள இஸ்ரேல் தரப்பு, ஒரு மணி நேரத்தில் 250 வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் தொடர்பில் இஸ்ரேல் கவலை கொள்வதாக இல்லை என்றே கூறுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments