நேற்று உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் முடங்கியதால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம், நேற்று இரவு தொழில்நுட்ப கோளாறால் சுமார் 7 மணி நேரம் முடங்கியது, இதனால் ஃபேஸ்புக் இன்ஸ்டகிரம் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் நேற்று இரவு முழுதும் தவித்தனர்.
பெரிய வர்த்தக நிறுவனமாக செயல்படும் பேஸ்புக் நிறுவனம், சுமார் நூறு கோடிக்கும் மேல் பயனர்களைக் கொண்டுள்ளது. நேற்று திடீர் தொழில்நுட்ப கோளாறால் பயனாளர்கள் அவதிப்பட்ட நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்
சுமார் 7 மணி நேர முயற்சிக்கு பின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின.
எனினும் இந்த சில மணி நேர பாதிப்பு, பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனாளர்களை விட ஃபேஸ்புக் தலைவர் ஜக்கர்பர்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஃபேஸ்புக் பங்குகள் மதிப்பு சரிந்ததால் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துவிட்டது. இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில் அவர் 3ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ஃபேஸ்புக்கின் விளம்பர வருவாயில் ஒரு மணி நேரத்திற்கு 7 கோடி ரூபாய் வீதம் 6 மணி நேரத்திற்கு 42 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.