தாயகவிடுதலைநோக்கிய பயணிப்பில் தேசப்பற்றும் மிக்க ஒருவராக நம்முடனே வாழ்ந்து வழிகாட்டிய மதிப்புக்குரியவரானவரும் மாவீரபுதல்வனை மண்ணிற்காக உவந்தவருமான அமரர்.மரியநாயகம் சோசை அவர்களின் இழப்புச்செய்தி வேதனையளிக்கிறது.
மன்னார் வங்காலை மண்ணில் முற்போக்கு சிந்தனைமிக்க ஒருவராக வாழ்ந்து கல்வி,கலை பண்பாட்டு விழுமியங்களோடு தேசவிடுதலைக்குரிய தனது பணியை அமைதியாக செயலாற்றிய ஒருவராகவும் மாவீரன் நிதர்சன் அவர்களின் தந்தை என்ற உரித்துடையவராகவும் இனப்பற்றுமிக்க நல் மனிதர் என்பதில் பெருமிதம் அடைகின்றோம்
.
வாழ்க்கை சக்கர ஓட்டத்தில் அழகான குடும்பத்தின் துணைவன்/ தந்தை
அழகிய பிள்ளைகள் பேரப்பிள்ளை என்ற வகிபாகம் இல் வாழ்வில் இனிமையாக வாழ்ந்த இவர் கடந்து வந்த பாதையில்
*கடற்தொழில் போதனாசிரியராவும் விரிவுரையாளராகவும்,
*கப்பல் ஓட்டுனராகவும்
*ஊரோடும் உறவுகளோடும் ஒன்றித்த வளர்ச்சிப்போக்கில் முன்னுதாரணமாக செயற்பெற்றவராகவும்
*கலைவிழுமிங்களை வாழ்வோடும் இணைத்துக்கொண்டவராகவும்,
*ஆங்கில மொழி சிங்களமொழி இரண்டிலும் பேசும் எழுதும் ஆற்றல்மிக்கவராகவும்,
இருந்த இவரது ஆற்றல் ஆளுமை தமிழர் தேசத்தின் விடுதலை அமைப்பிற்கு காலத்தி்ன் தேவையாக அமைந்தது.
தாயக விடுதலையில் தமிழர் தேசம் தனியரசாக அங்கீகாரம் பெறவேண்டிய எட்டிநின்ற சமாதான காலம் தமிழர் தாயக நிர்வாகம் விரிவாக்கம் பெற்று வியாபித்த 2002—2007 ம் ஆண்டு காலம் அரசியல்துறை செயற்பாடுகளில் சர்வதேச கவனத்தை ஈர்ந்த ”சமாதான செயலகம்” விரிவாக்கத்தில் மன்னார் மாவட்ட சமாதான செயலக பணிப்பாளராக மனமுவந்து கடமையை பொறுப்பேற்று
-சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்,அரசபிரதிநிதிகள் திணைக்களஅதிகாரிகள்,போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர்,சர்வதேச செஞசிலுவை சங்கத்தினர் என அனைவரிடத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை எண்ணங்களை அவ்வப்போது எடுத்துரைத்து கண்ணியமாக பணியாற்றிய தேசப்பற்று மிக்க சேவையாளன்.
உங்கள் இழப்பால் துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆறுதலைப்பகிர்ந்து கொள்வதுடன் நித்திய வாழ்வில் நீங்கள் அமைதியில் இளைபாற இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்துலக தொடர்பகம்