அச்சுறுத்தல் தொடர்பில் முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது! ஜெலன்ஸ்கியின் அறிவிப்பு

You are currently viewing அச்சுறுத்தல் தொடர்பில் முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது!  ஜெலன்ஸ்கியின் அறிவிப்பு

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலனா போர் 500 நாட்களை கடந்து தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

ரஷ்ய படைகளை பின்  தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெனலன்ஸ்கி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றும் போது,

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நமது தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. முன்னேறும் ஒவ்வொரு 1,000 மீட்டருக்கும் நாம் நமது போர் படைப்பிரிவின் ஒவ்வொருவருக்கும் நன்றி கூற வேண்டும்.

தற்போது பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் பெலாரஸ் பகுதியில் இருந்து இல்லை என முக்கியமான அறிக்கை கிடைத்துள்ளது. அங்குள்ள நிலவரத்தை நான் உன்னிப்பாகக் கண்காணிக்கிறேன். ஆனால் எனது முழு கவனமும் தற்போது போரின் முன்வரிசையை குறித்தே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments