அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானது!

You are currently viewing அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானது!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிக விரைவில் முக்கிய முடிவை அறிவிப்பார் எனவும் அது போருக்கான அறிவிப்பாக இருக்கலாம் எனவும் முன்னாள் சோவியத் ரஷ்ய தலைவரின் உறவினர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். சோவியத் ரஷ்யாவின் முதல் தலைவரான நிகிதா குருசேவ்வின் கொள்ளுப் பேத்தியே புடின் தொடர்பில் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவில் தற்போது வசித்துவரும் நினா குருசேவ் கூறுகையில்,

உக்ரைன் போரில் ஜனாதிபதி புடின் அடுத்து என்ன செய்வார் என்று நாட்டில் பதட்டமான ஒரு உணர்வு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மாஸ்கோவில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்திர வெளியுறவுக் கொள்கை மாநாட்டில் விளாடிமிர் புடின் தெரிவித்த கருத்துகளும் கவலை கொள்ள செய்வதாக நினா குருசேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருக்கிறதா என்று புடினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க அவர் 10 நொடிகள் வரையில் மெளனமானார் என்பது கவலை கொள்ளவேண்டிய விடயம் எனவும் பரவலாக கூறப்படுகிறது.

1964ல் வெளியேற்றப்படும் வரையில் நாட்டு மக்களுக்காக துணிச்சலான முடிவுகளை முன்னெடுத்த குருசேவ் போன்று கண்டிப்பாக புடினை ஒப்பிட வேண்டாம் என கூறியுள்ள நினா குருசேவ், உலகப் போருக்கு எதிரான முடிவை மேற்கொண்டவர் நிகிதா குருசேவ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய மக்கள் தற்போது மிகவும் அவநம்பிக்கையுடன் காணப்படுவதாகவும், நாளை என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழல் தென்படுவதாகவும் நினா குருசேவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானது என புடின் விளக்கமளித்துள்ளார். அதற்கான தேவை தற்போது எழவில்லை எனவும், அந்த மன நிலையில் தாங்கள் இல்லை எனவும் புடின் தெளிவுப்படுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments