அதிகரிக்கும் ரஷ்யாவுக்கான நோர்வேயின் ஏற்றுமதி!

You are currently viewing அதிகரிக்கும் ரஷ்யாவுக்கான நோர்வேயின் ஏற்றுமதி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையடுத்து, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் ரஷ்யாவின் மீது மிகக்கடுமையான பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவோடு எல்லைகளை கொண்டுள்ள நோர்வேயும் கடுமையான பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி / இறக்குமதி உட்பட, ரஷ்யாவுடனான வர்த்தகத்தொடர்புகளில் குறைப்பையும், இறுக்கத்தையும் விதித்திருக்கும் நோர்வேயின் ரஷ்யாவுக்கான சமீபத்திய ஏற்றுமதிகள் அதிகரித்து செல்வதாக கணக்கெடுப்புக்கள் காட்டுகின்றன. குறிப்பாக, ரஷ்யா மீது பொருளாதாரத்தடைகள் அறிவிக்கப்பட்டதன் காலப்பகுதிக்கு பின்னதாக, ரஷ்யாவுக்கான நோர்வேயின் ஏற்றுமதி அண்ணளவாக 7.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

விலங்குகளுக்கான தீவனம், பொறியியல் இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள், மீன் உள்ளிட்ட நுகர்வுப்பொருட்களை அதிகமாக ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துவரும் நோர்வே, கடந்த வருடம் சுமார் 3.7 பில்லியன் நோர்வே குரோனர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply