அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டு வருவதாக ஏமாற்றுகிறார் ரணில்!

You are currently viewing அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டு வருவதாக ஏமாற்றுகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டு வருவதாக ஏமாற்றுகிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழகங்களுடன் மாகாணசபை அதிகாரங்களை அமைப்பதற்கான முன் மொழிவு ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

வேடிக்கை என்னவென்றால் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கான கோரிக்கைகளை பல தடவை தமிழர் தரப்பு ரணில் விக்ரமசிங்கவிடம் முன் வைத்தும், குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்.

இதற்கு இனவாதி சரத் வீரசேகர கொம்புக்கு மண் எடுப்பது போல இனவாதத்தை தூண்டி தன்னுடைய அரசியலை நடத்துகின்றார்.

கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் தமிழர்கள் சார்ந்து கொண்டுவரப்பட்ட பல முன்மொழிவுகள் கடதாசிகளில் மட்டுமே இருந்தன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை அதே போன்று இம்முறையும் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயற்பாடாகும்.

உண்மையாக முதலாவது பொறுப்புக் கூறலின் ஊாடாக பக்க சார்பற்ற சுயாதீன விசாரணை அதன் பின்னர் தான் பரிகார நீதி இவ்வாறான ஒழங்கு முறை மூலமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் இதுவே பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையும் ஆகும்.

கடற்தொழில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகப் பெரும் ஏமாற்று காரணம் வடக்கு கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர் நோக்கும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் அட்டைப் பண்ணை விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு ரணில் விக்ரமசிங்க இதுவரை அவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்காமல் பிரச்சினைகளை கண்டும் காணாதவர் போல இருந்து கொண்டு, கடல்வள அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வேடிக்கையாக உள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments