அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளில் திமுக முதலிடம்!

You are currently viewing அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளில் திமுக முதலிடம்!

2020-21ஆம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளில் தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளதாக ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 பிராந்தியக் கட்சிகளில் திமுகதான் அதிக வருமானம் மற்றும் செலவினங்களைக் கொண்ட கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.529.41 கோடி ஆகும். இதில் திமுகவின் வருவாய் ரூ.149.95 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த படியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.107.99 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ஒடிஷாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளம் . கடந்த ஆண்டில் 73 புள்ளி ரூ.34 கோடி வருமானத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில், மொத்தம் ரூ.414.02 கோடியை கட்சிகள் செலவாக அறிவித்து உள்ளன, அதில் திமுகவின் செலவு 52.77 சதவீதம் ஆகும் அதாவது ரூ.218.49 கோடி ஆகும்.

தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.76 கோடி, அதிமுக ரூ.42.36 கோடி செலவு செய்ததாக அறிவித்துள்ளன. வருமானத்திற்கான 47.34 சதவீதம் ஆதாரம் தேர்தல் பத்திரங்கள் என 31 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

2019-2020 ஆம் ஆண்டில், ஏழு தேசியக் கட்சிகளின் வருமானத்தில் 62 சதவீதத்துக்கும் அதிகமானது தேர்தல் பத்திரங்களிலிருந்து வந்ததாக அறிக்கை கூறுகிறது.

தமிழ் நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.64.90 கோடி ஆக இருந்தது.

இது, கடந்தாண்டில் 131 சதவீதம் உயர்ந்து, 149.95 கோடி ரூபாயாக உள்ளது. அ.தி.மு.க ரூ.34 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அக்கட்சி ஆட்சியில் இருந்த 2019 – 2020ல், ரூ.89 கோடி வருமானம் ஈட்டியது.

இந்தத் தொகை, 2020 – 21ல் ரூ.34 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

2019 – ஆம் ஆண்டில் ரூ.1.50 கோடியாக இருந்த ம.தி.மு.கவின் வருமானம் 2020ல் ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. பா.ம.கவின் வருமானம் ரூ.55.60 லட்சத்தில் இருந்து ரூ.1.16 கோடி ஆக உயர்ந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments