அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முனையும் ரஷ்யா மற்றும் ஈரான்! அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு!!

You are currently viewing அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முனையும் ரஷ்யா மற்றும் ஈரான்! அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு!!

நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக ரஷ்யாவும், ஈரானும் அமெரிக்க வேட்ப்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாகவும், இதன் ஒரு அங்கமாகவே, அமெரிக்க ஜனநாயக கட்சியினருக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் தொனியில் அமைந்த மின்னஞ்சல்களை தாம் நோக்க வேண்டியிருக்கிறதென அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி நாடுகள், அமெரிக்க வாக்காளர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதன் மூலம், வாக்காளர்களின் விபரங்களை ஊடறுத்து, போலியான தகவல்களை பதிவேற்றிக்கொள்வதன் மூலம், தேர்தல் முடிவுகளை பாதிக்கச்செய்ய முடியுமென அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது.

இதேவேளை, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு வாக்களிக்கும்படி பயமுறுத்ததும் விதத்திலான மின்னஞ்சல்கள், வாக்காளர்களிடையேயும், கட்சிகளின் பிரமுகர்களிடையேயும் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அதிபராக வருவதற்கு, ரஷ்யாவின் பங்களிப்பு ஆதாரமாக இருந்தது என்பது, அமெரிக்க விசாரணைகள் மூலம் நிருபிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

பகிர்ந்துகொள்ள