கடந்த 12ம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற பேரினவாத சிங்கள அரசின் ராஜாங்க அமைச்சா் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல்கைதிகள் சிலரை முட்டுக்காலில் நிறுத்தி தனது துப்பாக்கியால் அவா்களை சுட்டுக்கொல்வேன் என அச்சுறுத்தியிருந்தாா்.
அந்த சித்திரவதை இடம்பெற்ற சம்பவத்தை முதல்முதலில் உறுதிப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் வெளிப்படுத்தியிருந்தாா். அதன் பின்னா் பல்வேறு தரப்பிடம் இருந்த எதிா்ப்புகளை அடுத்து ராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த அப்பொறுப்பகளில் இருந்து விலகியிருந்தாா்.
இந்நிலையில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினா்களாக கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டஆலோசகா் சட்டத்தரணி காண்டிபன் ஆகியோா் தமிழ் அரசியல்கைதிகளைச் சந்திக்க அனுராதபுரம் சிறைக்குச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு பல மணி நேரம் காத்திருக்கவைக்கப்பட்ட பின்னா் அரசியல்கைதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனா்