எமது அனைத்துவளாங்களில் கற்கைச் செயற்பாடுகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இவ்வாரம்(13.03.20 – 15.03.20) வெள்ளி, சனி, ஞாயிறு வகுப்புக்களை இடைநிறுத்துவது எனும் முடிவுவோடு அனைத்து இயங்கு நிலையையும் இடைநிறுத்தியுள்ளோம்.பாடசாலைச் செயற்பாடுகளின் மீள் ஆரம்பம் சார்ந்த தகவல்களைஎமது இணைத்தளத்தில் பார்வையிடலாம். கடந்த இருவாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம்,எங்களின் நாளாந்த வாழ்கையை மோசமாகப்பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய https://www.fhi.no/sv/smittsomme-sykdommer/corona/ ; என்ற இணையத்தளத்தை பார்வையிடவும். இவ்விடயம் சார்ந்து நோர்வே அரசு எடுக்கும் முடிவுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டிய கடப்பாடுள்ளது. சுகாதாரப்பிரிவின் முடிவுகளுக்கு ஒத்தவகையில் எமது கலைக்கூடமும் சில முடிவுகளை எடுக்கவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிந்திக் கிடைத்த செய்திகளின் படி நோய்க்கிருமியின் பாதிப்பால் அனைத்துப் பாடசாலைச் செயற்பாடுகளும்நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக நோர்வீஜிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
100 பேருக்கு மேல் கூடும் மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல சிறுவர்களை ஒருங்கமைக்கும் எமது நிறுவனம் மிகவும் நிதானமாகவும்,அவதானமாகவும், பொறுப்புணர்வோடும் சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம். ஆகையால் எமது வளாங்களில் கற்கைச் செயற்பாடுகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இவ்வாரம்(13.03.20 – 15.03.20) வெள்ளி, சனி, ஞாயிறு வகுப்புக்களை இடைநிறுத்துவது எனும் முடிவுவோடு அனைத்து இயங்கு நிலையையும் இடைநிறுத்தியுள்ளோம்.பாடசாலைச் செயற்பாடுகளின் மீள் ஆரம்பம் சார்ந்த தகவல்களைஎமது இணைத்தளத்தில் பார்வையிடலாம். நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும்நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள்,விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறைசெலுத்துமாறு பெற்றோர்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
-அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்-