அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

You are currently viewing அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு அமைய எமது மூதாதையரும் அறிஞர்களும் ஆய்வுசெய்து அறிமுகப்படுத்திய தமிழ்ப்புத்தாண்டு தமிழரின் அடையாளங்களை பிரதிபலித்து முன்பனி முகில்களை விலக்கி தை முதலாம்நாள் முகை அவிழ்த்துள்ளது.

இந்த நாளை எமது புத்தாண்டாக கடைப்பிடிப்பதில் இன்னும் தடைகள் இருக்கின்றது என்பதனை மறுப்பதற்கு இல்லை இருந்தபோதும் வரலாறு வழிகாட்டியாய் இருப்பதும் கல்வெட்டுக்கள் சான்றாக இருப்பதும் தமிழரின் பண்பாட்டு ஆண்டினை தமிழர் மனங்களில் இருந்து அகற்ற முடியாமல்  இருக்கின்றது.

ஆனாலும் ஆரியரின் ஆதிக்கம் தொடர்ந்த படியே இருக்கின்றது என்பதற்கு இன்னும் புத்தாண்டு தொடர்பான குழப்பநிலையில் இருக்கும் மக்களே சாட்சியாக இருக்கின்றார்கள்.

மறை மலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கி அதற்கூடாக தமிழ்மொழியின் பாரிய வளர்ச்சிக்காக போராடியவர் அதுமட்டுமல்லாமல் சித்திரையே தமிழ்ப் புத்தாண்டென நித்திரையில் இருந்த தமிழரை தட்டி எழுப்பி திருவள்ளுவர் ஆண்டுமுறையை கொண்டுவந்து தை முதலாம் நாளே தமிழர் புத்தாண்டு எனும் பெரும் தமிழ்ப்புரட்சியை உருவாக்கியவர்.

ஆகவே எமது புத்தாண்டு மலர்ந்திருக்கும் இவ்வேளையில் மானமுள்ள தமிழர்களாக மார்தட்டி நிற்பதோடு வேர்கொண்டு நிற்கும் தாய் மண்ணின் விடிவுக்காக ஓர்மையில் நின்று மாவீரரின் கனவினை காயப்படுத்தாது நேர்வழியில் விடுதலையை வென்றிட குழிகளில் உறங்கும் வீரப்புதல்வர்களின் ஆள்மன உணர்வுகளை நாடி நரம்புகளில் இருத்தி உலக ஒழுங்கின் அரசியல் நகர்வுகளுக்கு அமைவாக  அனைவரும் ஆழமான அரசியல் பணிகளை முன்னெடுக்க சபதமெடுப்போம்.

ஆளுக்கொரு திசையில் தமிழருக்கு தீர்வு என்ற மாயை அரசியலை உருவாக்காது தமிழரின் நிரந்தரமான தீர்வுக்காக விட்டுக்கொடுக்காத விடுதலை அரசியலை முன்னெடுப்போம் அதேவேளை எமது மாவீரர்களின் தியாகத்தாலும் மக்களின் அற்பணிப்பாலும் கட்டி எழுப்பப்படும் விடுதலைக்கோட்டையை சிதைத்து சின்னாபின்னப்படுத்த அழித்தவனின் பாதம் கழுவி நிற்கும் இழிநிலை மனிதர்களை ஓரம்கட்டி உரிமைக்காக உறுதியோடு பயணிப்போமென தமிழர் புத்தாண்டில் சத்தியம் செய்துகொள்வோம்.

பொங்கும் தமிழை பொலிவுறச் செய்வோம் எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்

நன்றி

தமிழ்முரசம் வானொலி

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments