அன்னை பூபதித்தாயின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நேற்று 16.04.2023 யாழில் இருந்து ஆரம்பம்.
அன்னை பூபதி அம்மாவின் 35வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு.அன்னையின் மாபெரும்தியாகத்தை இளையதலைமுறையினருக்கு எடுத்துக்காட்டவும்,அன்னையின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி வணக்கம் செலுத்தும்முகமாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினரால் தென் தமிழீழம் நோக்கி பூபதியம்மா நினைவுசுமந்த ஊர்திப்பயணம் நேற்று தியாகதீபம் திலீபன் அண்ணா நினைவுத்தூபியில் இருந்து ஆரம்பமானது.
தொடர்ந்து
தியாகத்தாயின் ஊர்தி பவனியானது மல்லாவி நகரையடைந்து இராணுவத்தின் 65ஆவது காலாட்படையால் அபகரிக்கப்பட்டுள்ள முல்லைமாவட்டம் மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்னாள் போராளி சுடரேற்றி வணக்கம் செலுத்தி
தொடர்ந்து
சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் கொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவநேசன் ஐயா அவர்களின் திருவுடல் விதைக்கப்பட்ட மல்லாவி அனிஞ்சியன்குளம் சாமாதியில் வணக்கம் செலுத்தி மாங்குளம் கனகராயன் குளம் புளியங்குளம் என ஊர்திப்பயணமானது தியாகத்தை தாங்கி தமிழீழ தேசப்பரப்புகளில் நகர்கின்றது.