முல்லைத்தீவில் கடற்படை புலனாய்வாளர் சடலமாக மீட்பு!

You are currently viewing முல்லைத்தீவில் கடற்படை புலனாய்வாளர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை புலனாய்வு அதிகாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையை சேர்ந்த குறித்த கடற்படை வீரர் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்கு சென்ற நிலையில் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments