அன்னை பூபதி என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!

You are currently viewing அன்னை பூபதி என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.!
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். 

மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத, எவருமே சாதித்திராத, மகத்தானை மனித அர்ப்பணிப்புக்களைக் கொண்டதாக எமது விடுதலைப் போராட்டம் புகழீட்டி நிற்கிறது.இந்த அற்புதமான தியாக வரலாற்றில் அன்னைபூபதி ஒரு உன்னதமான , தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.
சத்தியத்திற்காகச் சாகத் துனிந்துவிட்டால் ஒரு சாதாரன மனிதப் பிறவியும் சரித்திரத்தை படைக்க முடியும்.இதற்கு அன்னைபூபதியின் தியாகம் ஒருசிறப்பான எடுத்துக்காட்டு. சத்தியத்திற்காக, தர்மத்திற்காக அவர் சாவை அரவனைத்துக் கொண்டார். இந்த ஒப்பற்ற ஈகையால் ஒரு சாதாரண தாயான அவர், அசாதாரண சாதனையைப் புரிந்து தேசியத்தாய் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அறப்போரிலும் சரி, ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப்போர் உலகசாதனைகளைப்படைத்துவருகின்றது, மனித சிகரத்தை எட்டியிருக்கிறது.
அகிம்சையின் அறத்தையும், ஆன்மீக தர்மத்தையும் போதித்துவந்த பாரதநாடு ஆக்கிரமிப்புப் பூதமாக அன்றொருநாள் எம்மண்மீது கால் மிதித்தது. அப்பொழுது எமது போராளி ஒருவன் பாரதத்தின் ஆன்மீக மரபில் அறப்போரைத் தொடுத்தான்.
காந்தி அடிகளின் சாத்வீக தத்துவத்தை பாரத நாட்டிற்குப் புகட்டிக்காட்ட விரும்பினான். ஆன்மீக உறுதிப்பாட்டில் அவனது உயிர்த்தியாகம் காந்தியின் அறக்கோட்பாட்டிற்கு ஒரு மகோன்னதமான செயற்பாட்டுவடிவம் கொடுத்தது.
பாரதத்தின்மடிந்துபோனஆன்மீகம் தமிழீழத்தில் புதுப்பொலிவுடன் புரட்சி வடிவத்தில் மறுபிறப்பு எடுத்தது.
திலீபனின் தியாகம் இந்திய மாயையைக் கலைத்தது. தமிழீழ தேசிய உணர்வைத் தட்டி எழுப்பியது. இந்த தேசிய எழுச்சியின்வெகுசன வடிவமாக அன்னையின் அறப்போர் அமைந்தது.
அந்த வயோதிபத் தாய் நீதியின் நெருப்பில் தன்னை எரித்துக் கொண்டாள். அந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபமாக எரிந்துகொண்டு இருக்கிறது.
 – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள்
பகிர்ந்துகொள்ள

Leave a Reply