புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்!

You are currently viewing புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து!- ஒருவர் பலி, 10 பேர் காயம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் தம்புள்ளைக்கு அருகில் நேருக்கு நேர் மோதின. தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments