அமெரிக்காவின் அனுமதி : கொரோனா சிகிச்சைக்கு “Remdesivir” பயன்படுத்தலாம்!

  • Post author:
You are currently viewing அமெரிக்காவின் அனுமதி : கொரோனா சிகிச்சைக்கு “Remdesivir” பயன்படுத்தலாம்!

கொரோனாவுக்கான சிகிச்சைக்கு “Remdesivir” மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு மருந்தில்லாமல் துணை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளை ஓரளவுக்கு மீட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் “Gilead Sciences” நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ (Remdesivir) மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ( USFDA) அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் அனுமதி : கொரோனா சிகிச்சைக்கு
Gilead Sciences: அமெரிக்க உயிரியல் மருந்து தயாரிப்பு நிறுவனம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்தும் உரிய காலஅளவு குறித்து அதாவது, எத்தனை நாட்களுக்கு இதனைக் கொடுக்கலாம் என்பது தொடர்பாக தற்போது ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன .

இயல்பாக ஒரு மருந்தைச் சோதனை செய்த நாளில் இருந்து 90 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் “Stephen Hahn” தெரிவித்தார். இரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்தோருக்கும், சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுவோருக்கும் மட்டுமே Remdesivir மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் Gilead Sciences நிறுவனம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு பத்து நாள் சிகிச்சைக்குத் தேவைப்படும் 15 லட்சம் பொதி மருந்தை அமெரிக்க அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் அமெரிக்க அரசுடன் Gilead Sciences நிறுவனம் இந்த மருந்தை பிறநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறை பற்றி விவாதித்து வருகிறது.

பகிர்ந்துகொள்ள